Header Ads

  • சற்று முன்

    சுதந்திர வேள்வியில் முண்டாசுக் கவியின் பங்கு என்ற தலைப்பில் மாணவியின் பேச்சு......



    கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் சார்பில் விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின பேச்சு போட்டி நடந்தது. 


    இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு சுதந்திர வேள்வியில் முண்டாசுக் கவியின் பங்கு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், இன்றைய வேளாண்மையில் அறிவியல் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது.9 முதல் 10-ம் வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு சும்மா கிடைத்ததா சுதந்திரம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடந்தது. 11, 12-ம் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அக்னி குஞ்சொன்று கண்டேன் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், இந்திய விடுதலையும் சமூக விடுதலையும் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடந்தது. போட்டிகளில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் மன்ற செயலாளர் நம்.சீனிவாசன், இணை செயலாளர் ப.ஜாண் கணேஷ், துணை தலைவர் ச.திருமலைமுத்துச்சாமி, கே.ஆர்.ஏ. பள்ளி நிர்வாக மேற்பார்வையாளர் ரூத்தரமூர்த்தி, தமிழாசிரியர் ந.கெங்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆக.26-ம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad