Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் கோவில் உண்டியலில் மனு அளித்து இந்து முன்னணி அமைப்பினர் நூதன போராட்டம்


    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் கோவில் சொத்துக்கள், சிலைகள் ஆகியவற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் சிலை கடத்தல் வழக்கினை விசாரணை நடத்தும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு நெருக்கடி கொடுப்பதை கண்டித்தும்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் ஸ்ரீ செண்பகவல்லியம்மன் - ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் உண்டியலில் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயங்களின் 47 ஆயிரம் நிலங்களை காணவில்லை என்றும், சுமார் 7000 ஆயிரம் சுவாமி விக்ரஹங்கள் காணமால் போனது மட்டுமின்றி, 1700 விக்ரஹங்கள் போலியாக வைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் சிலைக்கடத்தல் வழக்கில் விசாரணை நடத்தும் ஐ.ஐp.பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு நெருக்கடி கொடுத்துவருவதாகவும்,  


    இவற்கை கண்டித்தும், கோவில் சொத்துக்கள், சிலைகளை பாதுகாக்க தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் ஸ்ரீ செண்பகவல்லியம்மன் - ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் உண்டியலில் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினை அம்பாள் சன்னதி முன்பு இருந்த உண்டியலில் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad