தனியார் பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் விநியோகம் - பொது மக்கள் குற்றசாட்டு
*ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்ரீ ஷீரடி சாய் பெட்ரோல் நிலையத்தில் கலப்பட பெட்ரோல் விநியோகிப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு*
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் நிரப்பும் நிறுவனத்தில், கலப்பட பெட்ரோல் விநியோகிப்பதால் வாகனங்கள் அவ்வப்போது பழுதடைந்து வருகின்றன எனவும், அதற்க்கு பெட்ரோலில் கலப்படம் செய்வதாலே நடைப்பெறுவதாக குற்றம்சாட்டினர்
தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீ ஷிர்டி சாய் பெட்ரோல் நிலையத்தில் தான் அன்றாடம் கூலி வேலை செய்யும் நாங்கள் தினந்தோறும் பெட்ரோல் நிரப்பி வருகிறோம் என தெரிவித்தனர் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிடுவதை தொடர்ந்து தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி ஆய்வு செய்து, பெட்ரோல் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்க்கு அனுப்பி வைத்துள்ளனர், அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை