Header Ads

  • சற்று முன்

    என்னைக் கொல்லாதே............ ஆசிரியர் : நீலம் மூன் முன் கதை (19.08.18) பார்க்கவும்


    காந்தா  என்னைக் கொன்னுட்டாங்கடா காந்தா...பேயாக கருப்பு உருவத்தில் மாடிப்படி ஏறினாள் ராகினி. . காந்தானின்  உடல் சூறாவளிக்  காற்றில்  ஆடும் முருங்கை மரமாக நடுங்கியது. அந்த  சமயத்திலும் ஆன்டிக்கு பேச்சு  வராதே.  இந்த வாய்ஸ் மென்மையாக  மெலோடியாக  அழைக்குதே  ஒரு வேளை பேயானதால் பேசுறாங்களா என சிந்தித்தான். காந்தா.. அநியாயமாய்  கொன்னுட்டாங்களே, என்னைக் காப்பாத்துடா  புலம்பிக் கொண்டு  ஏற வாயு வேகத்தில்  அனுமானுஷ்ய  சக்தி தன்னைத்  தாக்கவும்  உடல் அந்தரத்தில் தொங்க அம்.....மா  அம்ம  மா...அம்மா பெரிய குரலில் கத்தினான். நாக்கு மேல்  எழும்பவே இல்லை. கருப்பு நிழல் மெதுவாக ராகினியின் வீட்டிற்குள் சத்தமில்லாமல் மறைந்தது. விடிந்ததும் வாசலில் தண்ணீர் தெளிக்க அன்னம் கீழே இறங்க ஈரக் குடல்  ஒன்றோடொன்று  மோதி அல்லாட . காந்தன் படியில் குப்புற விழுந்து கிடந்ததைக் கண்டு,.  பெற்ற வயிறு பதற, ஐயோ வாங்களேன். புள்ளையை தூக்க வாங்களேன் ..என பெரிய குரலில் அழுதாள்.. தூக்கத்தில் இருந்த நடராஜன்  அலறி அடித்து லுங்கியை தாறு மாறாக பிடித்தது ஓடி வந்தான் .மகனின் நிலையை நொடியில் புரிந்து கொள்ள  அப்படியே தோளில் சுமந்து கொண்டு  படுக்கையில் படுக்க வைத்தான். பிடுங்கி  எறிந்த வேர் செடியாக தளர்ந்து வாடி கிடந்தான். 

    அதே சமயம்  திருப்பதிக்கு பாத யாத்திரை செல்வோர் பஜனை பாடல் பாடியவாறு வீதியில் சென்றனர். அதில் நரை முடி பழுத்த முதியவர்  ஒருவர் காந்தன் வீட்டின்மீது  பார்வையைச் செலுத்தி  பெரியவர்   நின்றார். ஏங்க,  காந்தனுக்கு என்னாச்சு எப்படி படியிலே விழுந்தான். எதைக் கண்டு பயந்தனோ. ராகினி முழுசா செத்து மூனு நாளுக் கூட ஆகல அதுக்குள்ளே மூச்சு பேச்சு இல்லாமல் விழுந்து  இருக்கானே.சாமி என கதறினாள். வெளியில் தயங்கி நின்றவர் பின்  என்ன எண்ணினாரோ தெரியாது  விடுவிடுவென படியேறி காந்தன் படுத்த அறைக்குள்ளே வந்து அவனின் உச்சியில் கை வைத்து முனுமுனுத்தார்.  அன்னம் அவரை நோக்கி, சுவாமி  என் புள்ள ....க்கு ..  ஒன்றும் மில்லையே சொல்லுங்க .கண்ணீர்  வடித்தாள். அவளுக்கு ஆறுதலாக அம்மா கவலை படாதே.ஒன்றும் இல்லை மடியிலிருந்து துலக்காத செப்புக் குப்பியை எடுத்தார்; அதிலிருந்து பச்சைவண்ண பொடியை அன்னத்திடம் கொடுத்து பசும் பாலில் கலக்கி கொடுஎன உரைத்து தன் கழுத்தில் அணிந்த துளசி மாலையைக் கழற்றி தந்தார். அம்மா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சுருக்காக திருமணத்தை முடிச்சுடுங்க  தாமதம் வேண்டாம். பெண்ணுக்கு எங்க போகறது சுவாமி  ஏற்கனவே முடிவு செய்ததை முடிங்க என்று நடராஜனை திரும்பி பார்த்தார். 

    அம்மா வீடு எல்லாம்  தண்ணீரில் மஞ்சளும் உப்பு போட்டு துடைத்தெடு என்று கூறி விட்டு சென்றார். சுவாமி  சொன்னாரே  ஏற்கனவே முடித்த பெண்ணா யாரு அது.  அன்னம் அப்போ அதுவா  முக்கியம்  காந்தன் எழுந்திருக்கட்டும்  வீடு எல்லாம் சாமி சொன்னப்படி  துடைத்து எடு என சட்டென பேச்சை மாற்றினர்.  இரண்டு மணி நேரம் கழித்து காந்தன் கண் விழித்தான். இரவு நடந்த நிகழ்ச்சி முன்னும் பின்னும் நினைவுக்கு வந்தது.  தலை லேசாக  வலிக்க  இடக் கையால் நெற்றியைத் தடவினான். அம்மா இராத்திரி  ஆன்டியை  பார்த்தேன் அம்மா அவங்க பேசறாங்கம்மா  என் கிட்டே பேசினாங்க  டேய் சும்மா பேத்தாதே .  ரெஸ்ட்லெஸ்சா அல்லாடுறே மொதல்ல அமைதியா இரு, பிறகு மற்றதைப் பற்றிப் பேசலாம்.அந்த வினாடி காந்தனின் கைப்பேசி சிணுங்கியது. நீலேஷ்  எண் . ஹலோ ஹலோ.....காந்தா ஏன்டா போன் ஸ்விச்சு ஆப்செய்தே  நீலேஷ்  ஆன்டி  நம்மளவிட்டு போயிட்டாங்கடா ...அழுதான். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad