• சற்று முன்

    ஓசூர் மக்கள் சங்கம் சார்பில் கேரளாவிற்கு நிவாரணப் பொருள்கள்


    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஓசூர் மக்கள் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்களை முதல் கட்டமாக  இன்று அனுப்பி வைக்கப்பட்டது.



    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் கேரள மாநில மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழையினால் 35 க்கும் மேற்பட்டவர்கள் ஊயிரிழந்துள்ளனர்.

    கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஓசூர் மக்கள் சங்கம் சார்பில் நிவாரணப் பொருள்களை செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அரசி , பருப்பு , கோதுமை மாவு மற்றும் ரொட்டி, பிஸ்கட், காய்கறிகள் , சோப்பு வகைகள், துணிகள் உள்ளிட்டவைகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு ஒரு லாரி நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஓசூர் மக்கள் சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad