• சற்று முன்

    ஓசூர் அருகே உயர் மின்சார அழுத்தத்தால் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்


    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த  தேன்கனிக்கோட்டை அருகே உனிசெட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்,  இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த.  ஒரு வாரமாக மின்சாரம் சீராக இயங்கமால் இருந்ததாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இன்று மின் இணைப்புகளில் அதிகம் மின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.  உயர் மின்சார அழுத்தத்தால் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட தொலைக்காட்சிகள் இன்று மின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிகள், மின் விசிறி, மிக்சி உள்ளிட்ட  மின்சாதன பொருட்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளது.
    இதனால், மலைவாழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மீண்டும் இவ்வாறு நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad