Header Ads

  • சற்று முன்

    கள்ள காதலுக்கு இடையூராக இருந்த கணவனை கொன்ற மனைவி கௌசல்யா கைது



    திருப்பத்தூர் கௌதமபேட்டையை சேர்ந்தவர் மணி இவரது மகன் ராசு    (. எ ) ராஜ்குமார் இவர் திருப்பத்தூர்  பேருந்துநிலையம் அருகில் உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் தினக்கூலியாக  வேலைசெய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு சுமார்  பத்து வருடம் ஆகிறது.  இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில்  திருப்பத்தூர்  அடுத்த ராவுத்தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் .பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். திருப்பத்தூர் கௌதமபேட்டையை சேர்ந்த பிரபல பெண் புரோக்கர் சீதா என்பவரை தொடர்புக் கொண்டு  எனக்கு எதாவது ஒரு பெண்னை ஏற்பாடு செய்துக் கொடு  நான் பணம் தருகிறேன் .என்று சொல்லியுள்ளார். இதனை புரோக்கர்  சீதா என்பவர் கௌசல்யாவின் ஏழ்மையை பயன்படுத்திக்கொண்டு ஏற்பாடு செய்துள்ளார்.  இதனிடையில் இருவரும்  பல இடங்களில்  சுற்றியும் உல்லாசமும் அனுபவித்துள்ளனர். இதில் கௌசல்யாவிற்கு  நிறைய பணமும் கொடுத்துள்ளார்.    இந்த விஷயம் கணவர் ராஜ்குமாருக்கு தெரியவர  மனைவியை கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில்  இருவருக்கும் இடையே  பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனை தனது கள்ளகாதலனுக்கு ரமேஷ்சிற்கு போன் மூலம் தகவல் சொல்லியுள்ளார்.  இதன்பேரில்  தனது கள்ள காதலுக்கு இடையூராக இருக்கும் தனது கணவன் ராஜ்குமார்ரை தீர்த்து கட்டினால்தான் நமக்கு எந்த இடையூறும் இருக்காது  என்று கூறியுள்ளார்.இந்நிலையில்  கடந்த  11 ம் தேதி சைக்கிள்  ஸ்டேண்டில் வேலை  செய்துக்கொண்டிருந்த ராஜ் குமாரை அதே பகுதியை சேர்ந்த  இரண்டு  நபர்கள் துளசி மற்றும்ஒருவர் தண்ணிஅடிக்க திருப்பத்தூரிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவுள்ள  டாஸ்மாக் மதுக் கடையுள்ள குனிச்சி பகுதிக்கு அழைத்துச் சென்று அளவுக்கதிகமாக மது ஊற்றி  ஒயரால் கழுத்தை இறுக்கி கொலைசெய்துள்ளனர் இதையறிந்த கந்திலி காவல் துறையினர்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


     இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜேசுராஜ் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டு குற்றவாளியை  கிருஷ்ணகிரி.ஓசூர் சேலம்.தருமபுரி மற்றும் பெங்களூர் பகுதிகளில் தேடிவருகின்றனர். இந்நிலையில்  நேற்று இரவு  கௌசல்யாவை விசாரணைசெய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வேலூர் பெண்கள் மத்திய சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

      செய்தியாளர் : திருப்பத்தூர் - கோவிந்த ராஜ்   

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad