திருமங்கலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக கூறிக் கொண்டு வலம் வந்த வாலிபர் கைது பல லட்சம் மோசடி செய்ததாக விசாரணை
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என வலம் வந்து பல பேரிடம் பல லட்சம் மோசடி செய்த வாலிபரை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுரை அருகே உள்ள சோழவந்தான் சேர்ந்தவர் நல்லதம்பி மகன் செந்தில்(35) இவர் பெருங்குடி காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் செல்வம் (44) இவருடைய மனைவி சத்தியசீலா மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக உள்ளார் செல்வம் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார்
இவருக்கும் செந்திலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது செந்தில் தன்னிடம் புது மாடல் கார் உள்ளது எனக்கூறி செல்வத்திடம் 7லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார் பின்னர் காரை திருமங்கலம் சுங்கச்சாவடி அருகே கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார் செல்வம் சுங்கச்சாவடி அருகே காத்துக் கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த செந்தில் காரை கொண்டு வராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது இதனால் இருவருக்கும் நடைபெற்ற வாக்குவாதத்தில் செந்தில் செல்வத்தின் மீது கல்லை வீசியுள்ளார் அந்தக் கல் அவர் மீது படாமல் செல்வம் இருசக்கர வாகனத்தில் பட்டதில் சேதம் அடைந்துள்ளது செல்வம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செந்திலை கைது விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடி செய்தது தெரியவந்தது மேலும் பல பேரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததும் தெரியவந்தார்.
செய்தியாளர் : மதுரை - நீதி பாண்டியராஜன்
கருத்துகள் இல்லை