Header Ads

 • சற்று முன்

  தமிழகத்தின் நிலத்தடிநீர் ஆதாரத்தை பெருக்க தொலைநோக்கு திட்டம் வேண்டும் - புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி


  கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் 100 ஆண்டுகள் மற்றும் பழமையான தடுப்பணைகள் உடையும்போது புதிதாக தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதனை நான் வரவேற்கிறேன். 1978களில் குடகனார் அணை பெரிய அளவில் உடைந்தது. இதுபோல பல நேரங்களில் இந்த அணைகள் உடைப்பு சரியாக கட்டாததால் நடக்கிறது. அணையோ, பாலமோ, சாலையோ, அதனை அமைக்கும்போதே தரத்தோடு அமைக்க வேண்டும்.திருச்சி முக்கொம்பு அணை உடைந்தது குறித்து பொதுப்பணித்துறை ஆய்வு செய்யும். தற்போதைய தேவை காவிரி ஆற்றின் நீர் வீணாக கடலில் கலக்கக் கூடாது. அந்த நல்ல நோக்கத்தில் ரூ.ஆயிரம் கோடியில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். அமைக்கப்படும் தடுப்பணை எந்த காரணத்தை கொண்டு உடையாத அளவுக்கு வலுவானதாக கட்ட வேண்டும். 

  இந்தியா முழுவதும் சீராக மழை பெய்யவில்லை. மழை அதிகம் பெய்த இடங்களில் அதிகம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போதிய மழையில்லை. இருந்தாலும் கூட தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டு கடலில் வீணாக கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். தடுப்பணைகள் கட்டும்போதே தேவையில்லாத எதிர்ப்புகள் வருகிறது. குறிப்பாக 2011 - 2016 வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, ரூ.4 கோடியில் வல்லநாடு அருகே தடுப்பணை கட்ட ஏற்பாடு பண்ணினேன். அப்போது வேண்மென்றே நீதிமன்றத்துக்கு செல்கின்றனர். தடுப்பணை என்பது தாமிரபரணியை தடுப்பதல்ல. அதை தாண்டி தான் தண்ணீர் செல்லப்போகிறது. 

  விவசாயிகள், விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் சில சுயநல அமைப்புகள் ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் செயல்படுகின்றனர். தடுப்பணைகள் போதிய அளவு இருந்தால் தான் நிலத்தடி நீரை உயர்த்த முடியும். 

  தமிழகத்தை பொறுத்தவரை வற்றாத ஜீவநதிகள் என்று பெரியளவில் இல்லை. கிடைக்கின்ற நீரை நீரை சேமிக்க ஓடைகள், ஆறுகளின் குறுக்கே வாய்ப்பு இடங்களில் தரமான, வலுவான தடுப்பணைகள் கட்ட வேண்டும். 

  தாமிரபரணியில் இருந்து வீணாக தண்ணீர் கடலில் கலக்கிறது. இது ஒருபுறமிருக்க மானூர் அருகே 500 கிராமங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. பள்ளமடை, மானூர் குளங்கள் நிரம்பவில்லை. இதையெல்லாம் கணக்கில் கொண்டு நீண்ட கால தொலைநோக்கத்தோடு நீர் மேலாண்மையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். 

  நிலத்தடிநீரை பெருக்குவது குறித்த கருத்தரங்கம் நடத்த உள்ளோம். 2018ல் மழை பொழிவு எவ்வளவு, எந்த அளவுக்கு காவிரி, வைகை, தாமிரபரணியில் இருந்து தண்ணீர் வீணானது. என்ன செய்தால் நீரை சேமித்து, வரக்கூடிய 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்திருக்க முடியும் என்பதை தமிழக அரசு கள ஆய்வு செய்து வெளியிட வேண்டும். மத்திய அரசும் நிலத்தடி நீர் பிரிவு மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

  நமது நாட்டில் மழை பெய்யும்போது, அதனை சேமிக்கும் கட்டுமானங்கள் இல்லை. அந்த குறைபாடுகளை களைய வேண்டும். முக்கொம்பு பகுதியில் உடைந்ததுபோல், இல்லாமல் நல்ல வலுவான தடுப்பணை கட்ட வேண்டும்.

  மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழகத்தின் நிலத்தடிநீர் ஆதாரத்தை பெருக்க தொலைநோக்கு திட்டம் வகுத்து போதிய நிதி ஒதுக்கி, அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

  செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad