• சற்று முன்

    இந்தியா அளவில் தமிழக சுற்றுலாத்துறை கடந்த 5 ஆண்டுகளாக முதலிடம் - அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் பெருமிதம்



    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்பு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்

    இந்தியா அளவில் தமிழக சுற்றுலாத்துறை கடந்த 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று வருவது மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையிலும் 4வது முறையாக இந்தியா அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தலைசிறந்த மாநிலங்களில் தமிழகத்தை 2வது மாநிலமாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. பல கட்டமைப்பு  ஒருங்கே அமைய பெற்ற மாநிலம் தமிழகம். சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருவது தான் தமிழகத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவதற்கு காரணம், அதோடு மட்டுமல்லாது மின் மிகை மாநிலம். தரமான சாலை மற்றும் போக்குரவத்து வசதிகள், பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் முதலிடம், சுகாதாரத்துறையிலும் அற்புத பணிகள் என அனைத்து துறைகளில் சிறப்பாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளதால், சுற்றுலாத்துறை மூலம் பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கும் நிதி ஆதாரங்களை கொண்டு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. சுற்றுலாத்துறையில் உள்ள நிறை குறைகளை அலுவலர்களால் ஆய்வு செய்து அந்த தகவல்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனடிப்படையில், சுற்றுலாத்துறை மேம்பாடுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, முதல்வர் உத்தரவின்பேரில் செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    சுற்றுலாத்துறை துறையில் நிதி ஆதாரமாக பிரசாத் திட்டம், சுதேஷ் தர்ஷன், ஆசிய வளர்ச்சி நிதி  மற்றும் அரசு வழங்கும் நிதி என அனைத்து நிதி ஆதாரங்களை கொண்டு சுற்றுலா துறை சிறப்பாக இயங்கி வருகிறது. ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் சிலையை பராமரிக்கவும், சீரமைக்கவும் இந்தாண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.

    அரசு சுற்றுலா துறை என்று எந்த இடத்தையும் அறிவிப்பதில்லை. சுற்றுலா பயணிகளுடைய எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ, அந்த இடத்தில் சுற்றுலாத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அந்த இடத்தின் பயன்பாடு குறித்து அறிந்து, சுற்றுலா பயணிகள் பயனடைகிற வகையில் தங்கும் வசதி, கழிப்பிட வசதி, உடைமாற்றும் அறை, குற்றாலம் போன்ற அருவிகள் உள்ள பகுதியில் படிக்கட்டுகள் சீரமைப்பது, கைப்பிடி சுவர்கள் அமைப்பது, தெருவிளக்குகள் போன்ற அனைத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சில குறைகள் இருந்தால் அவை வருகிற நிதியாண்டில் களையப்படும்.

    சுற்றுலாத்துறை சார்வில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் தான் அதனை பராமரிக்கும் முழுப்பொறுப்பை ஏற்றுள்ளனர். அதனால், சுற்றுலாத்துறை நேரடியாக ஈடுபட்டு வசூல் செய்கிறது, டெண்டர் விடுகிறது என்பது தவறான தகவல் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad