Header Ads

  • சற்று முன்

    ஆவடி அருகே பிரதான சாலையில் ஆல் துளை கிணறு தோண்டி பணி முழுமையாக செய்யாத பெருநகராட்சி மீது பொது மக்கள் குற்றச்சாட்டு.



    ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகள் உள்ளன.  இதில் அடிப்படை வசதிகள் சீராக இல்லாமல் இருப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக ஆவடி பெருநகராட்சிக்குட்ப்பட்ட 44 வது வார்டில் பிரதான சாலையான சோழன் நகர், பாண்டியன் தெருவில் 1500 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 5 ஆண்டுகாலமாக சாலைகளில் கழிவு நீர் செல்லும் நிலை உள்ளது. இதனால் தெற்று நோய், டெங்கு உள்ளிட்ட மர்ம காச்சல் போன்றவை ஏற்ப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் பிரதான சாலையில் ஆல்துளை கிணறு தோண்டப்பட்டு உள்ளது. இதனை. முழுமையாக. சிரமைக்காமல் இருப்பதால் சாலையை அமைக்க முடியாமல் உள்ளது. இதேபோல் கடந்த வருடத்தில் தமிழகத்தில் பெய்த மழை நீரை வெளியேற்ற அப்பகுதிக்கு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. 



    ஆனால் ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அந்த இயந்தியங்கள்  அப்பகுதி சாலை ஓரத்தில். குப்பையாக உள்ளது. இது சம்பந்தமாக நகராட்சி அலுவலரிடம் புகார்அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லயென குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை அமைப்பதாக கூறி இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சாலையில் ஜல்லிகளை கொட்டிவிட்டு சாலையை அமைக்காமல் சாலையை அமைத்ததாக கூறிய அதிகாரிகள் மக்களின் வரிப்பண்த்தில் முறைகேடுகள் செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், தமிழக  ஆளுநரிடமும், முதல்வரிடமும் மனு கொடுத்துள்ளோம் ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர். 



    குறிப்பாக அப்பகுதி. சுகாதார   ஆய்வாளர் பிரகாஸ் பொது மக்களை அவமதிப்பதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சாலையில் செல்லுவதற்கு சிரமமாக உள்ளதாக கூறிய அப்பகுதி மக்கள், உடனடியாக எல்லாவற்றையும் சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி நகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுப்படப்போவதாகவும், ஆவடி நகராட்சி அலுவலகம் மாபெரும் பேராட்டத்தில் ஈடுப்படப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad