Header Ads

  • சற்று முன்

    நாம் தமிழர்கட்சியினர் வாழை மரத்திடம் மனு அளித்து நூதனபோராட்டம்


    கோவில்பட்டி நகராட்சியில் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லை என்றும், நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் நிறைந்து இருப்பதாகவும், இந்த சூழ் நிலையில் தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக கோவில்பட்டி நகராட்சியை தேர்ந்தெடுத்து அரசு விருது வழங்கியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள வாழை மரத்திற்கு மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
    .

    அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றியும், முழுமை பெற்ற நகராட்சியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி இருப்பதாக தமிழக அரசு சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுத்து, இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கினர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி நகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், சுகாதாரம் கேள்விக்குறியான நிலையில் இருப்பதாகவும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெற்றுள்ளதாகவும், ஊழல் செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜேஸ்கண்ணா தலைமையில் நகராட்சி அலுவலகம் வாயிலில் இருந்த வாழைமரத்தில் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad