Header Ads

  • சற்று முன்

    ஆர்டிஓ சோதனைச்சாவடி நீண்ட வரிசையில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ் வாகனம்



    ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடி அருகில் வாகனங்களை சில தர்கர்கள் நிறுத்தப்படுவதால் நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் 20 நிமிடம் சிக்கி தவிப்பு  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பெங்களுரு&கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஆர்டிஓ சோதனைச் சாவடி  இயங்கி வருகிறது. தமிழகத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் நுழையும் அத்துணை வாகனங்களும் இந்த அலுவலகம் வழியாகத்தான் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்கின்றன.



    ஆர்டிஓ  சோதனைச்சாவடி ஓசூர் சிப்காட் பகுதியின் மையத்தில் உள்ளதால் தொழிற்சாலைகளுக்கு மற்ற மாநிலங்களிலிருந்து வாகனங்கள் மூலம் மூலப்பொருட்கள் வரும் போது வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும் தமிழகம், கேரள, ஆந்திர மாநிலங்களுக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் போது ஆர்டிஓ சோதனைச்சாவடி நிறுத்தப்படுகின்றன.
    இங்குள்ள தரகர்கள் சிலர் வாகனங்களை கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் போது நிறுத்துவதால் வாகனங்கள் நடு சாலையில் நிறுத்தப்படுகின்றன. தேவையற்ற வாகனங்களையும் இங்கு தரகர்கள் நிறுத்தப்படுவதால் வாகன நெரிச்சல் ஏற்படகிறது. பொது மக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மிகவும் அவதிப்படுகின்றன. 



    இந்நிலையில், பெங்களூரில் இருந்து ஓசூரில் உள்ள தனியார் மருத்த்துவமனைக்கு நோயாளியை ஏற்றி வந்த ஆம்லன்ஸ் இந்த போக்குவரத்து நெரிசலில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் சிக்கி தவித்தது.  இதனால் நோயாளிகளை உரிய நேரத்திற்கு மருத்த்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படும் நிலையில் உள்ளனர். 

    எனவே இந்த சோதனைச்சாவடியில் தன் சுயலாபத்திற்ககாக வாகங்களை நிறுத்தவது என்பது வேதனையளிகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad