Header Ads

  • சற்று முன்

    இலங்கை இராணுவத்தில் கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க கீரிபிள்ளை பயன்படுத்துகின்றனர்


    வெடி பொருட்களைக் கண்டறிய அதிநவீன கருவிகளும், பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், வெடி பொருட்களைக் கண்டறிய கீரிப் பிள்ளையைப் பயன்படுத்தும் திட்டமொன்றை இலங்கை இராணுவம் முன்னெடுக்கிறது.கொழும்பின் புறநகர்ப் பகுதியான மத்தேகொட என்ற இராணுவ முகாமில் இந்த கீரிப்பிள்ளைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இராணுவத்தின் பொறியியல் பிரிவு இந்த செயல்திட்டத்தை 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது.


    வெடிபொருட்களைக் கண்டறிய இலங்கை இராணுவத்தில் பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்களே இதுவரை பயன்படுத்தப்பட்டன. தற்போது விலங்கினத்தில் அதிக மோப்ப சக்தி கொண்ட கீரிப்பிள்ளையைப் பயிற்றுவிக்கும் முயற்சிக்கு'வெடிபொருட்களைக் கண்டறிய நாய்களை இதுவரைப் பயன்படுத்தி வந்தோம். வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் இந்த நாய்களுக்கு அதிக செலவாகிறது. இதனைத்தவிர அதிநவீன கருவிகள் பயன்படுகின்றன. இந்தக் கருவிகளின் விலைகளும் அதிகமாக உள்ளன. எனவே இதற்கு மாற்று வழியைக் கண்டறியும் தேவை இருந்தது. நாய்களுக்கு ஈடாக கீரிப்பிள்ளையைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்தோம். அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளோம். பொதுவாக நாய்களை விடவும் கீரிக்கு மோப்ப சக்தி அதிமாக இருக்கிறது. இதனால் வெடிபொருட்களை தேடிப்பிடிப்பதில் கீரி சிறப்பாக செயல்படுகிறது.'' என்று விவரித்தார்.நாய்கள் இயல்பாகவே தரையில் அல்லது தனது தலைக்கு கீழ் உள்ள வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. எனினும், கீரிப்பிள்ளை தரைக்கு கீழும், தரையில் இருந்து சுமார் 4 அடி உயரத்திலும் உள்ள வெடிபொருட்களைக் கண்டறிவதில் நாயைவிட சிறப்பாக செயல்படுகிறது.



    கீரிப்பிள்ளையைப் பயன்படுத்தும் இந்த முயற்சி, இதற்கு முன்னர் கம்போடியாவில் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாக தேசிய விலங்கியல் காப்பகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும், இந்த முயற்சி சரியாக முன்னெடுக்கப்பட்டதாகவோ, வெற்றி பெற்றதாகவோ எவ்விதத் தகவலும் இல்லையெனக் கூறினார். எனவே, வெடிபொருட்களைக் கண்டறிய கீரிப்பிள்ளையைப் பயன்படுத்தும் செயல்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கிறதுகண்ணி வெடிகளை அகற்றப் பயன்படுமா?

    கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இந்தக் கீரிகளைப் பயன்படுத்த முடியுமா என்று இராணுவ அதிகாரியிடம் கேட்டோம்.

    ''பொதுவாக நாய்களை கண்ணிவெடிகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தி வந்தோம். இது மிகவும் சிரமமான பணி. தற்போது வடக்கு கிழக்கில் 92 சதவீதம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய கண்ணி வெடிகளையும் அகற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    உலகில் வேறு நாடுகளில் இன்னமும் கண்ணிவெடிப் பிரச்சினை இருப்பதால், அதற்காக இவற்றைப் பயிற்றுவிக்க முடியும் என நம்புகிறோம். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஐ.நா. சபை உள்ளிட்ட தரப்பில் கோரிக்கைகள் வரும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வரும் போது கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் கீரிகளை எங்களால் பயிற்றுவிக்க முடியும்.


    கண்ணி வெடிகளை அகற்றப் பயன்படுமா?
    ''பொதுவாக நாய்களை கண்ணி வெடிகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தி வந்தோம். இது மிகவும் சிரமமான பணி. தற்போது வடக்கு கிழக்கில் 92 சதவீதம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய கண்ணிவெடிகளையும் அகற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    உலகில் வேறு நாடுகளில் இன்னமும் கண்ணிவெடிப் பிரச்சினை இருப்பதால், அதற்காக இவற்றைப் பயிற்றுவிக்க முடியும் என நம்புகிறோம். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஐ.நா. சபை உள்ளிட்ட தரப்பில் கோரிக்கைகள் வரும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வரும் போது கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் கீரிகளை எங்களால் பயிற்றுவிக்க முடியும்.

    எமது இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதால், எதிர்காலத்தில் போதைப் பொருட்களைக் கண்டறிவதற்கும் இவற்றுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதனை பரீட்சார்த்தமாக செய்துபார்த்தோம். போதைப்பொருட்களைக் கண்டறிவதிலும் கீரிகள் சிறப்பாக செயற்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் போதைப் பொருட்களைக் கண்டறிவதற்கும் கீரிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே தற்போது கீரிகளை இனப்பெருக்கம் செய்வித்து, சிறுவயது முதல் அவற்றைப் பயிற்றுவிக்கும் இரண்டாம் கட்டத்தில் ஆர்வமாக இருக்கிறோம்.'' என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad