கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ இல்ல திருமண விழா – துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவின் மகன் அருண்குமாருக்கும், சென்னை முகப்பேர் மேற்கைச் சேர்ந்த தினகரன் - சாந்தி தம்பதி மகள் திவ்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி, வெல்லமண்டி நடராஜன், சரோஜா, ராஜலட்சுமி, பாலகிருஷ்ணா ரெட்டி, ராஜேந்திரபாலாஜி, சம்பத், ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பசும்பொன் தேசீய கழகத் தலைவர் ஜோதிமுத்துராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமச்சந்திரன், நகரச் செயலர் விஜயபாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், கோவில்பட்டி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கித் தலைவர் ரமேஷ், துறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கணேஷ்பாண்டியன், மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ்குமார், கோவில்பட்டி பொதுக்கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ரத்தினராஜா, வழக்குரைஞர் முருகேசன்,
மாவட்ட ஆட்சியர்கள் சந்தீப் நந்தூரி, வீரராகவராவ், மாவட்ட எஸ்.பி முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோட்டாட்சியர் விஜயா உள்பட அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தொழிலதிபர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டு மக்களை வாழ்த்தினர்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, அவரது துணைவியார் இந்திரா காந்தி, அமைச்சரின் தந்தை செல்லையா, அமைச்சரின் மகள் காயத்ரி ரவிகுமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தார்.
கருத்துகள் இல்லை