Header Ads

  • சற்று முன்

    ஒகனேக்கல் செல்லும் வாகனங்களிடம் வசூல் வேட்டை நடத்தும் சோதனைச் சாவடி ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள்



    தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை கிராமத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான வனத்துறையின் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது


    இந்த சோதனை சாவடியில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு வாரத்தின் கடைசி நாட்க்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாமூல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.


    மேலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேலான வாகனங்களை இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு மாமூல் பெற்றுக்கொண்டு ஒகனேக்கல் மற்றும் அஞ்செட்டி செல்லும் இருசக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும் நான்கு சக்கர வாகனத்திற்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்

    கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் பதியப்பட்டுள்ளன வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்ய இரண்டு இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு ஒரு தாலில் பெயர்களை எழுதி வைத்துக் கொண்டு மட்டும், பணத்தை வாங்கிக் கொண்டு வாகனங்களை செல்ல அனுமதித்து வருகின்றனர் இவ்வாறு செல்லும் வாகனங்களில் சில சமூக விரோதிகளும் இருக்கலாம் அல்லது கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் கூட இருக்கலாம் அவர்களிடமும் ரூபாய் இருபது ரூபாய் மற்றும் 50 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு வனத்துறை ஊழியர்கள் வாகனத்தை சோதனை செய்யாமல் சர்வசாதாரணமாக விட்டுவிடுகிறார்கள் இதுபோன்ற சம்பவங்கள் இங்கு சர்வ சாதாரணமாக நடந்து வருவதாகவும்

    வனத்துறை உயர் அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் சோதனைச் சாவடி ஊழியர்கள் மீதும் அவர்களால் நியமிக்கப்பட்ட இடைத்தரகர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து இடைத்தரகர்களை அங்கு இருந்து வெளியே அகற்ற வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் ஆதங்கமாகும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad