Header Ads

 • சற்று முன்

  என்னைக் கொல்லாதே !!!

  அன்பார்ந்த வெப் சேனல் வாசகர்களே, வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  இனி நம் வெப் சேனலில் தொடர் நாவல் வெளியிட இருக்கிறோம்.
  இதை படித்த வாசகர்கள் கதையின் விமர்சனத்தை தெரிவிக்க கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
  நீலம் மூன்
  ராசகரே இல்லம், 43. கட்டபொம்மன் தெரு, சென்னை - 118.


                                                                                                                                          -நீலம் மூன்

  நெய் வாசனை மூக்கை துளைக்க கேம் விளையாடிக் கொண்டு சுற்றுச் சூழலை மறந்திருந்தவனை சுவையான மணம் ஈர்க்க வரண்டா சிட்டவுட்டில் அமர்ந்திருந்த லட்சுமி காந்த்  கண்ணை மூடி  ஆ ஹா சூப்பர் குலோப்ஜாமூன்  ஆளையே இழுக்குதே என விசுக்கென எழுந்து கீழ் போர்ஷனை எட்டிப் பார்த்து விட்டு அம்மா ....அம்மா என குரல் கொடுத்தான். காந்தன்.  சமையல் அறையில் இரவுக்கு தேவையான  சப்பாத்தியை  சுட்டுக் கொண்டிருந்தாள் அன்னலட்சுமி. . மகனின் அழைப்புக் கேட்டு என்னடா ஆச்சு ஊரே கேட்கிற மாதிரி கத்துறே. நியூ இயருக்கு என்ன  ஸ்சூவீட் செய்திருக்கேம்மா    உடம்புக்கு முடியில்லடா அதனால, உங்கப்பாவை  வரும் போது ஸ்ரீகிருஷ்ணா  ஸ்சுவிட்ல இருந்து கீ மைசூர் பாகு வாங்கி வரச் சொல்லிட்டேன். அட போம்மா. எப்பவும் மைசூர்பாகு தானா.  ராகினி ஆன்டியை  பாரு எப்படி  விதவிதமான டிஷ் செய்றாங்க.   பாவம் ஒருத்தரே கஷ்டப்படு வாங்க, நான் எல்ப்புக்கு. போயிட்டு வர்றேன்னு என்று கூறியவனை, . டேய்  அவங்கள தொந்தரவு பண்ணாதே என்று சொன்னதை காதில் விழவே யில்லை மளமளவென்று கீழே இறங்கினான். ஆறடிக்கு வளர்ந்தாலும் விளையாட்டு குணம் இன்னும் மாறவே இல்லை. ராகினியிடம் கொண்ட அன்பும் குறையவே  இல்லை. சொல்லப் போனால் தாய் அன்பையும் மிஞ்சி  உள்ளது. பத்து மாதம் சுமந்ததை விட இருபத்துநான்கு வருஷம் வளர்த்த பாசம் ஜெயிக்குதா என வெறுப்பில் கருகினாள். தன் மகன் தன்னை விட்டு விலகி செல்கிறானோ, முதல் முறையாக  அஞ்சினாள்.  ராகினி  அந்த பெயரே வேப்பங்காயாக கசந்தது. தானும் அவளிடம் அன்பாகத்தானே இருந்தேன்.எப்படி ஏற்பட்டது வெறுப்பு என வியந்தாள். அந்த சமயம்தான்  காந்தன் செல் போன் சிணுங்கியது. அரவிந் எண்  ஹலோ... டேய் மாப்பிள்ளை நீ கேட்ட மாத்திரா ரெடி எப்போ வரப்போறே. பத்து மணிக்கு மேலே கடையை சாத்தி வீடு திரும்பும் போது அம்மாவிடம் கொடுத்திடுடா ப்ளீஸ். வாஸ் ஒரு மாதிரி இருக்கே காந்த். நேத்து பெய்த மழையிலே நனைந்து போயிட்டேன்.லொக்கு லோக்கு என் இரும்பினான். ஒ. கே. மச்சான்.  அத்துடன் செல்லை அணைத்தான். அன்னலட்சுமிக்கு வேத்து கொட்டியது.                                                                      மூடிய  கதவைத் தட்ட கைவைக்கவும் பட்டென கதவு திறக்கவும் சரியாக இருந்தது. பொன் மகள் வந்தாள். பொருள் கோடி தந்தாள் என்ற திரைப்படப் பாடல் சன்லைப்பில் லோ வாய்ஸில் ஓடிக் கொண்டுருந்தது. ஆன்டி தட்டுவதற்குள் சட்டென்று திறந்திட்டீங்க இதழ் ஓரம் சிறுபுன்னகை விரித்து திரும்பினாள். ராகினிக்கு நாற்பதுக்கும் மேலே ஒன்று அல்லது மூன்று அதிகம் இருக்கலாம். நடுத்தரமான உயரம் கடைந்தெடுத்த சதைப் பிடிப்பு. எலுமிச்சை நிறம் சுருள் சுருளான அடர்த்த நீண்ட  கேசம். பளபளக்கும் படர்ந்த முகம் பளீச்சென்று மின்னும் குட்டி சிவப்பு முழு. நிலா நெற்றியில்  மிளிரும் மொத்தத்தில் அழகும் மென்னையும் நிறைந்த எழில் நிலா. உடலில் காது மூக்கில் கைகள் கழுத்து  என்று மொட்டு தங்கமும் அணிந்திருக்கவில்லை . ஆனால். மோதிர விரலில் படமெடுத்த நாக உருவம்பொறித்த தங்க மோதிரம்  மட்டும்தான் அவள் அணிந்திருந்தாள்.


  தொடரும்........................

        

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad