• சற்று முன்

    விடுமுறையில் நாளில் விடுவிக்கப்பட்டது எப்படி ? பொது மக்கள் கேள்வி.....

    திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தில் நேற்று(21-08-2018) இரவு ராமநாதபுரம் ஆர்.டி.ஒ. மற்றும் திருவாடானை தாசில்தார் சாந்தி ஆகியோர்கள் எதிரே வந்த  டி.என் 63 எ.எக்ஸ். 644 டிப்பர் லாரியை மடக்கி பார்த்த போது அந்த லாரியில் உரிய அனுமதியின்றி மணல் இருந்து வந்த நிலையில் லாரி டிரைவர் வண்டியை விட்டு ஓடிவிட்டார். தாசில்தார் டிரைவர் அந்த லாரியை எடுத்து வந்து தாலுகா அலுவலகத்தில் நிறுத்தியுள்ளார். இன்று 22.08.2018ம் தேதி அரசு விடுமுறை நாளில் காலை 9.00 மணியளவில் அந்த லாரி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே தாசில்தார் அலுவலகத்தில் பிடித்த வண்டி நிற்கிறது. ஆனால் இந்த வண்டி விடுவிக்கப்பட்டது பொது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த லாரி முறையான ஆவணங்கள் இல்லை என்றும் பொது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. எனவே இது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad