Header Ads

  • சற்று முன்

    திருமங்கலம் அருகே துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் - எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் !!


    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் மூணான்டிபட்டி பகுதியில் துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்


    திருமங்கலம் அருகே உச்சப்பட்டி தோப்பூர் பகுதிகளில் துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு தமிழக வீட்டு வசதி வாரியம் 572 ஏக்கர் பரப்பளவில் துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது இதில் உச்சப்பட்டி பகுதியில் 60 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் மேலும் மூணான்டிபட்டி பகுதியில் சுப்பிரமணி ஒச்சாதேவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவருடைய 18 ஏக்கர் நிலம் விவசாயம் செய்து வருகின்றனர் மேலும் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதால் நிலங்களை துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு கொடுக்க மறுத்து வழக்கு தொடர்ந்திருந்தனர்
    இந்நிலையில் இன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் 18 ஏக்கர் விவசாய நிலங்களை பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அழித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட வந்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்ய வந்தவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் தங்களுடைய வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர் மேலும் அத்துமீறி விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குடும்பத்துடன் தற்கொலை போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர் இதனை தொடர்ந்து போலீஸார் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட வந்தபோது இளைஞர்கள் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினர் மேலும் பெண்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கைது செய்தனர் விவசாயி சுப்பிரமணி மண்ணெண்ணை குடித்து தற்கொலைக்கு முயன்றார் இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காயமடைந்தவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad