Header Ads

  • சற்று முன்

    திருபத்தூரில் உயர்விலை மதுபானக் கடை திறந்து வைத்து தமிழக அரசின் சாதனை



    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என்றாலே ஒரு பெருமை மிக்க ஊர் ஆகும். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் முதல் முறையாக ஒரு சப் கலெக்டர் அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டது. சேலம் முதல் சித்தூர் வரை எல்லை உருவாக்கபட்டு அதற்கு தலைமை இடம் தேர்வு செய்யப்பட்டது. அதுதான் நம்ம திருப்பத்தூர் சப் கலெக்டர் அலுவலகம் தற்போது உள்ள ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு சிறப்பு அப்போது ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்த சப் கலெக்டருக்கு குடிக்க தண்ணீர் தர மறுத்துள்ளார் திருப்பத்தூர் பகுதி  பொதுமக்கள். இதன் விளைவாக ஈரோட்டில் இருந்து ரயில் மூலமும் ரயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள பகுதியில் இரவோடு இரவாக ஒரு கிணறு வெட்டி அதன் மூலம் குடிநீர் பிரச்சினை ஆங்கில சப் கலெக்டர் சரி செய்துள்ளார் என்பது வரலாறு. இப்படி பல சிறப்பு மிக்க  திருப்பத்தூரில் தமிழக அரசு சார்பில் பழைய பேருந்து நிலையம் எதிரே ஒரு அரசு மதுபான கடை, திருப்பத்தூர் பெரிய ஏரி கரை ஓரம் இரண்டு மதுபான கடைகள் என திறந்து வைத்து ஏழை எளிய மக்களையும் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளையும்  பெரும் குடிகாரனாக மாற்றி வருகிறது. 



    இந்நிலையில் புதிதாக திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி- தர்மபுரி கூட்டு சாலையின் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அடி தளத்தில்  பெண்கள் அதிக அளவில் வரும் அழகு நிலையம், சொகுசு விடுதி, உணவு விடுதி தங்கும் விடுதி போன்ற விடுதிகள்  இருக்கும் இடத்தில் தற்போது தமிழக அரசு விலை உயர்ந்த மதுபான கடையை திறந்து வைத்துள்ளது.இதன் அருகில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில்  இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஒசூர், பொங்களூரூ மற்றும் திருப்பத்தூரை சுற்றுள்ள கிராம பகுதிகளுக்கு இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் பேருந்து எற வேண்டும். 



    இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகில் தான் புதிதாக மதுபான கடையை தமிழக அரசு திறந்துள்ளது. இதனால் ‌பள்ளி மாணவர்கள், பெண்கள், பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மற்றும் பெண்கள் அலகு நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மதுபான கடையை கடந்து தான் செல்ல வேண்டும்.  எனவே பொதுமக்களின் நலன் கருதில் கொண்டு உடனடியாக இந்த விலை உயர்ந்த மதுபான கடையை தமிழக அரசு மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திருப்பத்தூர் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad