Header Ads

  • சற்று முன்

    தமிழில் நீட் தேர்வு எழுதியோருக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்


    இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை அடிப்படையில் வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க இயலாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad