• சற்று முன்

    ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடையை சூறையாடிய வழக்கில் 40 பேர் விடுதலை வேலூர் கோர்ட் உத்தரவு



    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை சூறையாடிய வழக்கில் 40 பேரை விடுதலை செய்து வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அழிஞ்சிக்குப்பம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19.5.2017 அன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது டாஸ்மாக் கடையை சூறையாடப்பட்டதுடன், காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 40 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 40 பேரையும் விடுதலை செய்து வேலூர் மாவட்ட விரைவு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 40 பேரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad