குடிதண்ணீர் கேட்டு காலிகுடங்களுடன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட பெண்கள்
கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சித்தன் நகரில் 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படமால் இருப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் காலிகுடங்களுடன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் ஊராட்சிக்குபட்ட பகுதி வி.பி.சித்தன் நகர்.இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் வாசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 6மாதங்களுக்குமேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி மன்ற ஊழியர்கள் பணம் கேட்பதாகவும், தர மறுத்த காரணத்தினால் கூடி தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், தற்போது 20 ரூபாய் வரை கொடுத்து குடிதண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் உடனடியாக குடிதண்ணீர் வழங்க வேண்டும், மேலும் நாலாட்டின்புதூர், இனாம்மணியாச்சி பகுதியில் தேசிய ஊராக வேலைவாயப்பு திட்டத்தில் பலருக்கும் அட்டைகள் வழங்கப்படவில்லை என்றும், அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் காலிகுடங்களுடன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்களது கேரிக்கை அடங்கிய மனுவினை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர். மனுவினை பெற்று கொண்ட அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.
கருத்துகள் இல்லை