காட்பாடி போக்குவரத்து காவல்துறை, நாட்டு நலப்பணி திட்டம், ஜுனியர் ரெட்கிராஸ் இணைந்து நடத்திய போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி போக்குவரத்து காவல்துறையின் சார்பிலும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அமைவு மற்றும் ஜுனியர் ரெட்கிராஸ் சார்பில் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார்.
காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீத்தாராமன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. இரு சக்கர வாகன ஓட்டிகள் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும், கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று இப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது. மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். வாகனம் ஒட்டும் உரிமம் பெறாதவர்கள் யாரும் வாகனம் ஓட்டக்கூடாது. தங்களின் பெறோருக்கு இத் தகவலை தெரிவித்து இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைகவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றார். மேலும் சாலை விதிகளை மதிப்போம், சாலை விதிகளின் செயல்படுவது குறித்த உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் மா.பாரதி உதவி தலைமையாசிரியை டி.என்.ஷோபா பள்ளி ஆசிரியர் சங்க செயலாளர் அ.கலைச்செல்வன் ஆகியோர் உள்பட ஆசிரிய ஆசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.








கருத்துகள் இல்லை