Header Ads

  • சற்று முன்

    8 மாதங்களாக மூடப்படாத குழி – விபத்துக்குள்ளான லாரி


    கோவில்பட்டி நடராஜபுரம் தெரு பகுதியில் குடிநீர் திட்டபணிக்காக தோண்டப்பட்ட குழி 8மாதங்களாக மூடப்படாத நிலையில் இன்று அந்த குழியில் சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி சிக்கி விபத்துக்குள்ளான காரணத்தினால் அப்பகுதி மக்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான நிலையில் குழி வழியாகவும், தண்டவாளம் வழியாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்டபட்ட பகுதி நடராஜபுரம். இந்த பகுதியில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவில்பட்டி நகரில் உள்ள அனைத்து சமூகங்களுக்கான சுடுகாடு மற்றும் நகராட்சி சுடுகாடு இந்த பகுதியில் தான் உள்ளது. நடராஜபுரம் தெரு முகப்பில் கடந்த 8மாதங்களுக்கு முன்பு 2வது குடிநீர் திட்டபணிகளுக்காக குழாய்கள் பதிக்க அப்பகுதியில் குழி தோண்டப்பட்டது. ஆனால் அதன் பின்பு எவ்வித பணியும் நடைபெறவில்லை, 



    அந்த வழியாக சென்ற கழிவு நீரும், அந்த குழியில் தேங்கி ஏற்கனவே சென்று கொண்டு இருந்த குடிநீர் குழாயில் கலந்த காரணத்தினால் பொது மக்கள் கழிவு நீருடன் கலந்த குடிநீரை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், குழாயை உடனடியாக பாதிக்க வேண்டும், இல்லை குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலையில் அப்பகுதியில் நடைபெறும் கட்டிட பணிகளுக்காக சிமெண்ட் மூடை இறக்கி விட்டு திரும்பிவந்த லாரி எதிர்பாராத விதமாக அந்த குழியில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. ஏற்கனவே சுரங்கபாலத்தினால் போதிய பாதை வசதி இல்லமால் இந்த ஒருபாதையை தான் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பாதசாரிகள் சென்று வந்த நிலையில் லாரி விபத்துக்குள்ளான காரணத்தினால் இந்த பாதையும் அடைப்பட்டதால் பொது மக்கள் காலை நேரத்தில் செய்வதறியமால் தவித்தனர். பள்ளி, கல்லூரி செல்லுபவர்கள் மற்றும் வேலைக்கு செல்லுபவர்களுக்கு நேரம் ஆன காரணத்தினால் ஆபத்தினையும் உணரமால் லாரி சிக்கி கொண்ட குழியின் ஒரு பகுதியாக நடக்க ஆரம்பித்தனர். பள்ளி சென்ற சிறு குழந்தைகளை அருகில் இருந்தவர்கள் அப்பகுதியை கடக்க அவர்களுக்கு உதவி செய்தனர். இருப்பினும் பலர் குழியை கடக்கும் போது தவறி விழுந்தனர். சிலர் அருகில் இருக்கும் ரெயில் பாதை வழியாக சுற்றி மெயின் சாலைக்கு சென்ற அவலமும் ஏற்பட்டது, 

    இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சுரங்கபாலம் வழியாக செல்லூம் சூழ்நிலை ஏற்பட்டது.இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்த போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் வெளிNயு செல்ல முடியமால் ஒரு வித ஆபத்துடன் நடந்து செல்கின்றனர். இந்த நிலையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக மற்றும் தேமுதிக கட்சியினர் 3வது வார்டு கிளைசெயளாலர் ஆறுமுகம் தலைமையில் குழிக்குள் இறங்கி குழிக்கு மலர் மாலை அணிவித்து கோ~ங்கள் எழுப்பினர். இனியாவது இந்த மரணக்குழியை மூடாவிட்டால் அடுத்தகட்டமாக சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளதாக எச்சரித்தனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad