• சற்று முன்

    ஆவடியில் உள்ள விளிஞ்சம்பாக்கம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்லமுதல் முறையாக சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்துள்ளது



    சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.பிரபாகரன் அவர்கள் தாய் மற்றும் சேயையும் சந்தித்து நலம் விசாரித்து தாய் சேய் நலப்பெட்டகத்தை வழங்கினார்.



    இன்னும் கிராமபுறங்களில் பெண்சிசுகளை கொன்று வரும் நிலையில் இந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்குழந்தைகள் பிறந்தற்க்காக பாராட்டுதலையும் கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முதல் முறையாக தமிழகத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்து தாய் மற்றும் சேய் நல்லமுறையில் மருத்துவம் பார்த்துள்ளார்கள்
    இதன் மூலம் ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்லாமல் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க ஒரு தூண்டுதலாக இது அமையும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார். மேலும் இங்கு சராசரியாக 30 மேற்ப்பட்ட சுகப்பிரசவம் இதுவரை நடைப்பெற்றுவந்துள்ளது. அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்க்கு வேறு அரசு மருத்துவமனைகளுக்கோ அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கோ செல்லவேண்டிய சூழ்நிலை இருந்தது தற்பொழுது இங்கு அறுவை சிகிச்சை வசதிகள் ஏற்ப்படுத்தி உள்ளதால் ஏழை தாய்மார்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவித்தார்.

    செய்தியாளர் : ஆவடி - போஜராஜன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad