பழனிநகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி பகுதியில் எதிர்வரும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் தடுக்கும் முறைகளும், முன் எச்சரிக்கைகளும் மற்றும் காய்ச்சல் ஒழிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழனி நகராட்சி ஆணையர் ஜோதி குமார் உத்தரவின் பேரிலும் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேசிய சாரணர் இயக்கம் கருடரின் ஒத்துழைப்பு பெயரில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. தண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது,
பழனி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேசிய சாரணர் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொன்டனர், திண்டுக்கல் ரோடு, மத்திய பேருந்து நிலையம், திருவள்ளூர் சாலை, லட்சுமிபுரம், வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தது பேரணியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள், திறந்த வெளி மலம் கழித்தல் தடை செய்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மேலும் எதிர்வரும் காலங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வதற்க்கும், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரத்தை மூடி வைத்து கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும், காய்ச்சல் கண்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெறுமாறு, பொதுமக்களுக்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பழனி நகராட்சி சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது, இப்பேரணியில் கல்லூரி என்சிசி மாஸ்டர் பாக்கியராஜ் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் வேல் முருகன் மணிகண்டன் சந்தோஷ் குமார் கார்த்திகேயன் மற்றும் களப்பணி உதவியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை