குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

யானை தாக்கி ஒருவர் பலி


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி  பால கொண்டப்பா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை  அருகே உள்ள கோணமாக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பால கொண்டப்பா(70). நேற்று  மேய்ச்சலுக்குச் சென்ற இவரது மாடுகளில் ஒன்று மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து,  மாட்டை தேடி கோணமாக்கனப்பள்ளி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்ற போது, வனப்பகுதியில் சுற்ரி திரிந்த  ஒற்றை யானை பாலகொண்டப்பாவை விரட்டி சென்று  தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நீண்ட நேரம் கழித்தும் விவசாயி வீடு திரும்பாததால் உறவினர்கள் சென்று பார்த்த.போது விவசாயி பால கொண்டப்பா யானை தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை  போலீசார் மற்றும் வனத்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை