பழனியில் மீனவர் சங்க கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு
அதிமுக அணியில் 5 பேரூம் கம்யூனிஸ்ட் அணியில் 2 பேரும் வெற்றி பெற்றனர்...
பழனியில் கடந்த 16ந் தேதி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மீனவர் சங்க தேர்தல் நடைபெற்றது.இதில் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.இதில் அதிமுக ஒரு அணியாகவும் கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும் மொத்தம் இரு அணிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் இரண்டாயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் வாக்களித்தனர்.இன்று மாலை 7.00 மணியளவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டனர். இதில் அதிமுக அணியைச் சேர்ந்த இளையராஜா, சங்கிலி, மகுடீஸ்வரன், அன்னாவி, ஜீவா, ஆகியோரும் அதே போல் கம்யூனிஸ்ட் அணியைச் சேர்ந்த கமூர்தின்,மாரியம்மாள்,என்பவர்களும் வெற்றிபெற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயரை அறிவித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக கூட்டிச் சென்றனர்.







கருத்துகள் இல்லை