• சற்று முன்

    அமைச்சர் கடம்பூர் செ.ராஜு இல்லத் திருமண விழா: கோவில்பட்டியில் பந்தற்கால் நாட்டு விழா


    தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவின் இல்லத் திருமண விழா இம்மாதம் 30ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பந்தற்கால் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 


    தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு - இந்திராகாந்தி தம்பதி மகன் அருண்குமாருக்கும், தூத்துக்குடி மாவட்டம் வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்த தினகரன் - சாந்தி புதல்வி திவ்யாவுக்கும் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் இம்மாதம் 30ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளது. 

    அதையடுத்து, கதிரேசன் கோயில் சாலையில் உள்ள கோகுலம் வளாகத்தில் வியாழக்கிழமை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவின் தந்தை செல்லையா, அமைச்சரின் மனைவி இந்திராகாந்தி மற்றும் அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்
    பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் ரமேஷ், துறையூர் கணேஷ்பாண்டியன், வழக்குரைஞர் ரத்தினராஜ், செண்பகமூர்த்தி, வேலுமணி, அலங்காரப்பாண்டியன், ரத்தினவேல்பாண்டியன், மாதவராஜ், வண்டானம் கருப்பசாமி, ஜெமினி என்ற அருணாசலசாமி, ஆபிரகாம் அய்யாத்துரை,  இனாம்மணியாச்சி மகேஸ்குமார், அல்லித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    செய்தியாளர் : கோவில்பட்டி  - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad