Header Ads

  • சற்று முன்

    என்னை கொல்லாதே... ஆசிரியர் : நீலம் மூன் - இதன் முன் கதை 14.08.18



    ஆன்டி, கதவை சாத்தவும், நடுநிசியில் இதென்ன புதுப்பழக்கம் சேரில் அமர்ந்து அப்படி என்ன தலை போகும் சமாச்சாரம்.எதைப் பற்றி சிந்தனைச் செய்கிறார். இரத்த  பந்த  உறவோ அவர்களை வற்புறுத்தி அந்த பெண் யார், எபபடி உங்களைப் போன்று  இருக்குறாங்க  சொல்லுங்க என்று உலுக்கி பதில்  பெற துடித்தான். இரவு வேளை துன்பம் தர பிடிக்காமல்  விடிந்ததும் விசாரிக்கலாம்.என நினைத்து தூங்கப்  போனான். லட்சுமிகாந்தன்.  உள்ளே சென்ற ராகினியிக்கு விவரிக்க முடியாதபாரம் தலையில், ஏறியது .தூக்கம் நெருங்காததால் போர்ட்டிகோவில்  வந்து அமர்ந்தாள்.  ஆனால் அங்கும் நிம்மதியாக உட்கார விடல விதியின் விசித்திரம் எந்த துர்பாக்கியவதியோ என்னையே உரித்து வந்திருக்கிறாள். யாராக இருப்பாள், விரலை தடவினாள். இதே மோதிரம் இதென்னடா ஈசன் விளையாட்டு கடவுளேனு  நெஞ்சை பிடித்தாள்.அப்போ  அவன் வந்திருக்கானா முகத்தில் வியர்வை முத்துக்கள் போட்டது. அதே சமயம்  தெரு நாய் சத்தத்தையும்  மீறி சரக்....சரக் காலை தேய்த்து நடக்கும் செருப்புகள் சப்தம் ஒலித்தது. அதற்கு மேலும் தனித்து இருக்காமல் எழுந்து கதவை சாத்தினாள். அன்று இரவு இருவருமே நன்றாக உறங்கவில்லை.புரியாத புதிருக்கு விடை காணத் துடித்தனர்.                  

    மறுநாள் நண்பர்களைப் பார்க்க சீக்கிரம் புறப்பட்டான்.. வாசலில் நியூஇயர் கோலம் போடாமல் வெறுமனே தரை அழுது வடிந்தது. ஆன்டிக்கு என்னாச்சு, சுறுசுறுப்பா  விடியற் காலையிலே எழுந்துடு வாங்களே ....ம்....ம்...தப்பா படுதே, இரவு அதிக நேரம் கண் விழித்ததால் ஏற்பட்ட அசதியே,. களைப்பு காரணம் தான் இருக்கும். சரி அம்மாவிடம் சொல்ல நினைக்கவும் செல்போன் அலறவும் சரியா இருந்தது.  காந்த் நான் கிளம்பிட்டேன்  லேட் பண்ணாதே வந்துடு. டேய் மாப்பிள்ளை நானும் ரெடி இதோ வர்றேன் என கூறியவன்.; செல்லில் அம்மாவுடன் தொடர்பு கொண்டான், என்னடா அதுக்குள்ளா போனு, சும்மா பேசாதேம்மா சொல்லுறதை கேளும்மா ஆன்டி இன்றைக்கு வாசல்ல கோலம் போடல. அட கடவுளே நாளும் கிழமையும் வெறுமையவா கிடக்கு இரு நானு சுத்தம் பண்ணுறேன். ஐயோ அம்மா அது முக்கியமில்லை. ஆன்டியை கவனி, கதவும் திறக்கல. சரி நான் விசாரிக்குறேன். தொடர்பைத் துண்டித்தாள். வண்டியில் ஐந்து நிமிடம் சென்றிருப்பான். வழி எங்கும் கோவிலில் சிறப்பு பூசைகள் நடைபெற்றன.

     அந்த பெண்ணைப் பற்றி யோசித்தி உடம்புக்கு முடியாமல் போனதோ  பாவம் ஆன்டி பச்சாதாபம் கொண்டான். செல்சிணுங்கியது.ஆன்செய்து இதோ... டேய் காந்தா கதவு திறக்கலடா நீ உடனே திரும்பி வாடா அப்பா ஒத்தையில தவிக்குறாரு.  அம்மாவின் பேச்சில் ஒருவித படபடப்பு காணப்பட்டது. பயப்படாதேம்மா நொடியில் அங்கே இருப்பேன் கலங்காதேம்மா  தைரியமாக இரு ஆறுதல் அளித்தான். ஆன்டிக்கு ......எதுவும் தோன்றாமல் கலகங்கினான். உடம்புக்கு முடியாதவங்க போனில் அம்மாவிடம் உதவி கேட்டிருக்கலாமே சட்டென தலையில் குட்டிக் கொண்டான்.  வாய் பேசாதவர். அவர் மீது எரிச்சல்தான் ஏற்பட்டது. அழகு தேவதையைப் படைத்த பிரம்மதேவன்  சரஸ்வதி கடஷ்யம் வழங்க மறந்தானே பொன் வைக்கும் இடத்தில் பூ  வை என்பார்கள் பெரியோர். அது எத்தனை நிஜம்,  தேஜசை கொடுத்து கிள்ளை மொழி பேச்சைப் பறித்தானே. இருப்பினும் வாய் பேசாதது கயல்விழிகள் கேட்டதற்குப் பதில்அளிக்கும். என பலவாறு  சிந்தித்தான்   ஜாக்கிரதையாக  சாலையில் விபத்தின்றி வீடு சேர்ந்தான். வீட்டின் முன்னால் எதிர் வீடு பக்கத்து வீட்டு மனுஷால் கூடிஇருந்தனர். 

    அக்காட்சியைக் கண்டது,ம் வயிற்றில் ஏதோவொரு புழு ஊர்ந்தது  நெஞ்சில் இதயம் எக்ஸ்பிரஸ்  வேகத்தில் தடதடதட...அடித்தது, அன்னலட்சுமி மகனைக் கண்டதும் பாய்ந்தோடி தோளில்  சாய்ந்துகொண்டு கதவு திறக்கவேமுடியில்ல கடைசியில்  அக்கம்பக்கம் சேர்ந்து கதவை உடைச்சு போன காந்தா பாருடா  ஆன்டியை இழுத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு வினாடி மூச்சின்றி மரமாக நின்றான் அழகு தேவதை மீளா உறக்கத்தில் துயில் கொண்டாள்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad