• சற்று முன்

    பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைக்க கோரி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுக்கை


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள செவல்குளம் கண்மாய் அருகே உள்ள அரசு நிலத்தில் பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்,  பூங்கா மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றி தரக்கோரி அக் கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு மனு அளித்தனர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள செவல் குளம் கண்மாய் அருகே ஒன்றே முக்கால் ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகே மயானம் உள்ளது.எனவே, உத்திரகிரியை மண்டபம், மயானத்துக்கு சென்று வருபவர்கள் குளிப்பதற்கும், 


    இப்பகுதி பெண்களுக்கு சுகாதார வளாகமும், சிறுவர்கள் விளையாட பூங்காவும் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் கண்மாய் அருகேயுள்ள பகுதியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருவதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம மக்கள் மற்றும் அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டனர்;.



     மேலும் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினையும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்தனர்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad