• சற்று முன்

    கோவில்பட்டி அருகே ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் கடையில் திடீர் தீ விபத்து



    கோவில்பட்டி அருகே ஆட்டோ ஸ்பேரர் பார்ட்ஸ் கடையில் தீடீர்  தீ விபத்து 12லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாத்தூர்  சாலையில் உள்ள மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் கடையில் ஏற்பட்ட தீடீர்  தீ விபத்தில் 12லட்ச ரூபாய் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார்  தெரிவித்துள்ளனர் . தீ விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செல்லப்பாண்டி நகரைச் சேர;ந்த காசிராஜன் என்பவரது மகன் மகேஸ்வரன். இவர்  சாத்தூர்  சாலையில் ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் கடை வைத்துள்ளர் . நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்து வருகிறார் . அவரது கடையில் இருந்து புகை வருவதை கண்ட அருகில் இருந்த கட்டிடத்தின் வாட்ச்மேன், மகேஸ்வரனுக்கு தகவல் கொடுத்துள்ளார;. இதனை தொடர்ந்து மகேஸ்வரன் கடையை திறந்து பார;த்த போது தீ பிடித்து எரிந்த கொண்டு இருப்பதை கண்டு அதிர;ச்சியடைந்தர் ;. இதனை தொடர;ந்து தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார;. தீயணைப்பு துறையினர; விரைந்து தீயை அணைத்தனர் . இருப்பினும் கடையில் இருந்த சுமார்  12 லட்ச ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad