Header Ads

  • சற்று முன்

    *ஓசூர் அடுத்த கருக்கம்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பசுமைகுட்டை அமைப்பதில் ஊழல்*



    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த  கெலமங்களம் ஒன்றியத்துக்கு உட்ப்பட்ட கருக்கம்பட்டி கிரமத்தில் மாகத்ம காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு சுமார் 2.80 லட்சம் ரூபாய் செலவில் பசுமை குட்டை அமைக்கப்பட்டது,



    இன் நிலையில் இரண்டு மாதத்திற்க்கு முன்பு மீண்டும் கருக்கம்பட்டி கிராமத்தில் பசுமை குட்டை அமைத்ததாக கூறி சுமார் 1.50 லட்சம் ரூபாய் வரை  அரசாங்கத்தை ஏமாற்றி கையாடல் செய்திருப்பதாக கிளர்க் இராதாகிருஷ்ணன் மீது அந்த ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டிவுள்ளார்கள்,

    இதற்க்கு ஆதாரமாக கருக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் கூறுவது கடந்த 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பசுமை குட்டையை தற்ப்போது கிளர்க் இராதகிருஷ்ணன் ஒரு JCB எந்திரம் மூலம் 5000/- ரூபாய் செலவில் சீர் அமைத்து விட்டு, முன்பு யார் ரெல்லாம் பசுமை குட்டைக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்தார்கலோ அவர்கள் வங்கி கணக்கில் தற்போது வேலை செய்ததாக சுமார் 25க்கும் மேற்ப்பட்டவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டதாகவும் அதன் பிறகு வங்கியின் உதவியாலர் லோகேஷ் என்பவர் உதவியுடன் கிளர்க் இராதகிருஷ்ணன் வேலை பார்த்தாக வங்கி கணக்கிள் பணத்தை செலுத்திய நபர்கள் வீட்டிற்க்கு சென்று வங்கி கணக்கின் அட்டையை வாங்கி பணத்தை முழுவதும் கிளர்க் இராதகிருஷ்ணன் எடுத்து கொண்டு 1000 ரூபாயிக்கு 100 ரூபாய் கமிஷன் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார்



    உதாரணத்திற்க்கு:- பாஞ்சாலி என்ற பெண் வேலை செய்ததாக வங்கி கணக்கில் ரூபாய் 6400 போடப்பட்டு, பாஞ்சாலியிடம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து தருமாரு கிளர்க் இராதாகிருஷ்ணன் கேட்டு பெற்று கொண்டு பாஞ்சாலிக்கு 600 ரூபாய் கமிஷனாக கொடுத்துள்ளார் இதேப்போல் கருக்கம்பட்டிகிராமத்தில் சுமார் 25 பேரிடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட நபர்கள் வேலை பார்த்ததாக அவர்கள் வங்கி கணக்கில் பணத்தினை வரவு வைத்து விட்டு அரசாங்கத்தின் லட்சக்கணக்கான பணத்தை கிளர்க் இராதாகிருஷ்ணன் கையாடல் செய்திருப்பதை கிராம மக்கள் ஆதரத்துடன் கூறி வருகிறார்கள்.

    மேலும் அமைக்காத பசுமை குட்டை திட்டதை அமைத்தாக கூறி மக்களின் வரி பணத்தினை இப்படி ஊழல் செய்யும் கிளர்க் இராதாகிருஷ்ணன் எந்த பின்னணியில் செயல்படுகிறார் அவர் பின்னாடி யார் உள்ளார் எனவும் அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராம மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

    சமீபத்தில் நடிகர் வடிவேலின் படத்தில் வருவதை போல் "வெட்டாத கிணற்றுக்கு லோன் கொடுத்ததைப் போல் " ஸார்வுடன் வடிவேலும் கிணற்றை தேடுவதை போல். தற்போது உண்மையிலே கருக்கம்பட்டி கிராமத்தில் அமைக்காத பசுமை குட்டை யை அமைத்ததாக கூறி பல லட்சம் ரூபாய் ஏமாற்றி கையாடல் நடந்துள்ளது,

    இப்போது கருக்கம்பட்டி கிராம பொதுமக்கள் 2015 ஆம் ஆண்டு அமைத்த பசுமை குட்டை உள்ளது, இரண்டு மாததிற்க்கு முன்பு அமைக்கப்பட்ட பசுமை குட்டை கானம் என்று புகார் கூறி வருகிறார்கள்,

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad