கோவில்பட்டியில் நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது பைக் மோதல் -அரசு பஸ் நடத்துனர் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ராஜன்(45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் இன்று காலையில் வழக்கம் போல வேலைக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். எட்டயபுரம் தொழிற்பேட்டை அருகே சாலைபகுதில் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்ற வந்த கண்டெயினர் லாரி ஒன்று நின்றுள்ளது. எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக நின்று கொண்டு இருந்த கண்டெயினர் லாரி மீது ராஜனின் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையின் பின் பகுதியில் பலத்த காயமடைந்த ராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
இது குறித்து தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ராஜ் தலைமையிலான போலீசார் ராஜனின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றுனர்
கருத்துகள் இல்லை