• சற்று முன்

    7 பேரை பலி வாங்கிய சொகுசு கார்


    கோவை சுந்தராபுரம் பகுதியில் 4 வழிச் சாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்களும், பொதுமக்களும் பஸ் மற்றும் ஆட்டோவுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.



    அந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் அங்கிருந்த மின்கம்பம் சேதமடைந்தது.

    இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவர் மற்றும் 3 பயணிகளும், சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி உள்பட 7 பேர் பலியாகிவிட்டனர். மேலும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 7 பேர் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. சொகுசு காரை ஓட்டிய டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.
                                                                                                                    செய்தியாளர் : கதிரவன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad