Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் மாவட்ட முதன்மை நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர்களை அனுமதிக்க மறுத்ததை கண்டித்து, அனுமதி மறுத்த மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவனை கண்டித்து கோவில்பட்டியில்  வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்தது மட்டுமின்றி, லோத் அதலாத் நீதிமன்ற நிகழ்வின் போதும் கலந்து கொள்ள போவதில்லை என்று வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் நேற்று தூத்துக்குடி மாவட்ட சட்டபணிகள் குழு மற்றும் கோவில்பட்டி தாலூகா சட்டபணிகள் குழு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் பங்கேற்றக கூடாது என்று மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், நீதிபதியை கண்டித்தும் கோவில்பட்டியில் இன்று வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். மேலும் லோக் அதலாத் நீதிமன்ற நிகழ்வினை அனைத்து வழக்கறிஞர்களும் புறக்கணிப்பது, தாலூகா சட்டபணிகள் குழுவில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர்கள் அதில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.



    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad