Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே கடலையூரில் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட நினைவு தினம்


    வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட நினைவு தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூரில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி முன்பு அமைந்துள்ள நினைவு ஸ்தூபியில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.



    1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி மகாத்மா காந்தியடிகளால் வெள்ளையனே வெளியேறு போராட்டம் அறிவிக்கபட்டு இந்தியா முழுவதும் நடைபெற்றது. கடலையூரில் ஆகஸ்ட் 22ம் தேதி சுதந்திர போராட்ட தியாகி வெயிலுகந்த முதலியார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆங்கிலேய அரசு துப்பாக்கி சூடு நடத்தியது, துப்பாக்கி சூட்டில் சங்கரலிங்க முதலியார் குண்டடிபட்டு பலியானார், மாடசாமி முதலியாரின் இடுப்பில் குண்டு பாய்ந்து வெளியேறியும், ராமசாமி முதலியாரின் கட்டை விரல் துண்டாகி இருவர் படுகாயம் அடைந்தனர்.நெசவு தறி அனைத்தும் சூறையாடபட்டது, 34 தியாகிகள் கைது செய்யபட்டனர், அனைவரும்  பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி இறந்துவிட்டனர். தியாகிகளின் நினைவாக பள்ளி முன்பு 2008ல் பொதுமக்களாhல் நினைவு ஸ்தூபி அமைக்கபட்டது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தபட்டு வருகிறது. 


    இன்று வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலையூரில் நடைபெற்ற நினைவு ஸ்தூபியில் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் அனைவரிடமும் தேசப்பக்தியையும், தேசப்பற்றையும் வளர்க்கவும், தேசிய ஒருமைபாட்டை காக்கவும், உறுதிமொழி எடுத்துக் கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்கு  கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார்,செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் விவேகானந்தன், ஊர் பெரியவர் சூரியபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பட்டதாரி ஆசிரியை திலகவள்ளி அனைவரையும் வரவேற்றார்.

    கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தியாகி வெயிலுகந்த முதலியாரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வீராச்சாமி, துணை செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் பால்ராஜ், உறுப்பினர் முத்துமுருகன், ஊர் பிரமுகர்கள் பாலாறு பரமசிவம், எட்டப்பன் பள்ளி இளநிலை உதவியாளர் நாகராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியை மகேஷ்வரி நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad