Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி புதிய உறுப்பினர்கள் அறிமுக கூட்டம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி புதிய உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது புதிய நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு கூட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரச் செயலாளர் காளிராஜ்  தலைமையில் நகரத் தலைவர் ராஜபாண்டி முன்னிலையில் மாவட்ட செயலாளர் வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் கோவில்பட்டி நகராட்சி தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுத்ததற்கு நிலைகெட்ட நகராட்சியாக உள்ளதாகவும் 36 வார்டுகளிலும் குடிநீர் வசதி சாலைவசதி வடிகால் வசதி ஆகியவை முறையாக இல்லை எனவும் அதனால் சிறந்த நகராட்சிக்கான அந்தஸ்து கோவில்பட்டி நகராட்சிக்கு பொருந்தாது எனவும் இரண்டாவது பைபிளின் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் ஓடைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மேலும் சொத்து வரி கடுமையாக உயர்ந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் எட்டையாபுரம் கழுகுமலை கயத்தாறு ஆகிய பகுதிகளில் இருந்து புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad