Header Ads

 • சற்று முன்

  என்னைக் கொல்லாதே !!! நீலம் மூன் முன் கதை (25.08.18)  காந்தன் சொன்னது உண்மையா, ஒருவரைப் போல ஏழுபேர் இருப்பாங்க ஆனால் மோதிரம் ம்...ம்... அந்த மாதிரியான டிசைன் யார் விரலிலும் பார்த்தது  கிடையாது.  விசித்திரமானது நன்கு படுத்த பாம்பு, தலையை தூக்கி  படம் எடுத்து  பார்க்கும். பாம்பு நெற்றியில் திருமாலின் நாமாக வெள்ளை திருஷ்ணம்  வண்ணத்தில் உயர் ஜாதி கற்கள் பதித்து கைவேலைப் பாடு  வேறு எங்கும் காணாதது அப்படி இருக்க எப்படி ஒன்றாகத்   தோன்றும். சிந்திக்க வேண்டும். அதிலும் ஆன்டி சாயலுடைய பெண்ணைக் கண்ட அன்றே மரணம் சம்பவித்துள்ளது. நிறையவே சிக்கல்கள் புதைந்துள்ளன. அதை உடைத்தெரிந்து ....என நினைத்தவாறு அரவிந்தன் மெடிக்கல் ஷாப்புக்குச் சென்றான்.  

  டேய் மாப்பிள்ள எப்ப ஊர்லே இருந்து வந்தே  இன்னிக்கு காலையிலே சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்துக்கு வர்றேன். நீ எனக்கு எல்பு பண்ணனும்    என்னடா பெரிய பீடிகை போடுறே  சமாச்சாரம் சொல்லுப்பா. காந்தன்  உன் கடைக்கு எப்போ வந்தான். மூனு நாளுக்கு முன்னாலே, ஏன்னா சங்கதி, போலீஸ்காரன விசாரிக்குற மேட்டர்......இழுத்தான்  உச்ச ச்சு.  உச்ச்சு கொட்டினான், நீ சிசிடி காமராவை  பத்து நாளுக்கு முன்னாடி இருந்து காட்டு. தகவல் ரொம்பவும் முக்கியம்.  உள்ளே வந்து பாரு என்றான்.   கேமரா ஓடியது. காந்தன் வந்து நின்றான். சற்று நேரம் பேசி விட்டு திரும்பும் போது  அந்தப் பெண் நுழைந்தாள்.  ஸ்லோ ..ஸ்லோ பண்ணு .அச்சு அசலு  ஒரே வார்ப்படத்தில் ஊற்றிய உருவ  அமைப்பாக இருந்தது.  நீலேஷ் இமைகள் இமைக்க மறந்து வியப்புடன் கூர்ந்து நோக்கினான்.  

  அந்த பெண் பிரிஸ்கிரிப்ஷன் நீட்டினாள்  பில் கொடுத்தும் ஆயிரம் ரூபாய் தாளை தந்தாள். வலது விரலில் மோதிரம் பளீச்சென   பளபளத்தது. அரவிந்த்   ச்ஜும் போடு, காந்தன் உரைத்தது இம்மி அளவுக் கூட மாற்றம் இல்ல அடுத்த நிமிடம் குண்டு கிழவன் அம்மாடி வா சீக்கரம்  மீதி சில்லறை              பிறகு பார்த்துக்கலாம் கண்களில் பதட்டம் தெரிந்தது.பிடித்து இழுத்து ஓடினான்.  இருவர் கண்களிலும் அச்சம் கௌவ்வி இருந்தது.       அச்சத்திற்கு காரணம் தான் என்னவோ  தலையை சொறிந்தான். யாரோ  பின்  தொடர்வது போல ஓடினரே என்னவாக இருக்கும் என மோவாயை  தடவினான். உடனே ஷேடோன் செய்ய நினைக்கும் போது அடுத்து மருந்து வாங்க வந்தவனை கவனித்தான். ஏறத்தாழ  ஐம்பது வயது மதிக்கத் தக்கவன்  மருந்து சீட்டை நீட்டினான். அவன் கவனம் முழூக்க ஆன்டி போலவே காணப்பட்ட பெண் மீது தாவியது. அவன்  கண்களில் ஏளனப் பார்வை எட்டிப் பார்த்தது. எதற்காக கேவலமான பார்வையைச்  செலுத்த வேண்டும். என நினைத்தவன்  தேவையான  அளவிற்கு  பிரிண்ட்  அவுட்  போட்டு  கிளம்பினான். அப்போது தோளைத் தழுவி கத்தி பாய்ந்தோடி  பாய  எதிரே   கண்டெயினர்  எமனாக வேகமாக  விரைந்து மோத. அ..ம்,....மா..ஆஅ...ஆஆ.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad