ஓசூர் அருகே திருமணமான மூன்று மாதங்களிலேயே பெண் தற்க்கொலை,
ஓசூர் அருகே திருமணமான மூன்று மாதங்களிலேயே பெண் தற்க்கொலை, சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொடியாளம் கிராமம் வெங்கடரமனப்பா மகன் சிவா(30) வசந்தா (19) என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக பெற்றோர்களால் திருமணம் நடத்திவைக்கப்பட்டது
வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டின் அறையில் புடவையில் தூக்கிட்டுக் கொண்டதாக வசந்தாவின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது, வசந்தா தூக்கில் இருந்ததைக்கண்ட வசந்தாவின் கனவர் சிவா விஷம் அருந்தி தற்க்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ,இந்நிலையில் வசந்தாவின் பெற்றோர்கள் தங்களுடைய மகள் மிகவும் மன உறுதிக்கொண்டவள் தற்கொலை செய்திருக்கவில்லை, சிவாவின் பெற்றோர்களால் கொடுமைப்படுத்தி கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்து பாகலூர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
சிவாவின் பெற்றோர்கள் கூறுகையில்
வசந்தா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரது பெற்றோர்கள் அதை மறைத்து எங்கள் மகனுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர். வசந்தா எப்பொழுதும் சோகத்தோடே காணப்பட்டு வந்ததாகவும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வசந்தா தற்க்கொலை செய்துக் கொண்டிருப்பதற்க்கும் எங்கள் குடும்பத்திற்க்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என கூறினார் ஓசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ், ஓசூர் மருத்துவமனையிலிருந்த வசந்தாவின் உடலை பார்வையிட்டு இருதரப்பினரிடமும் விசாரனை மேற்க்கொண்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை