என்னை கொள்ளாதே............ ஆசிரியர் நீலம் மூன் இதன் முன் கதை 11.08.18 பார்க்கவும்
அவளின் தோற்றம் எவ்வளவு மென்மையோ அதை விட ஆயிரம் மடங்கு இதயம் மிருதுவான பூவின் இதழ் போன்றது. பட்சணங்கள் செய்வதில் சலிப்படையவே மாட்டாள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக வலம் வருவாள். அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு, முதியோர் இல்லங்களுக்கு என்று இனிப்புகளை செய்து வழங்குவாள். அதற்காக கொஞ்சமும் தயக்கம் காட்டியது கிடையாது. ஆன்டி, குலோப்ஜாமூன் என்னை வசியம் பண்ணி உங்க கிட்டே இழுத்துடுச்சி என்று கூறியவாறு சகஜமாக சமையல் அறைக்குள் நுழைந்தான்.. மேடையில் அகன்ற பாத்திரத்தில் கோலி குண்டுகளாக மிதந்த குலோப்ஜாமூனை ஒன்றை எடுத்து வாயில் போட்டான். வா...வ் . வெரி ஸ்வீட் டேஸ்ட் அமிசிங் ஆன்டி உங்களை அடிச்சிக்க யாருமில்ல. என புகழ்ந்தான். போதும், கையால் சாடை காட்டி பிரிஜ்ஜை திறந்து ஐஸ்கிரீமை பௌலில் வைத்து நாலு குலோப்ஜாமூவை போட்டு நீட்டினாள். சந்தோஷத்தில் அப்படியே சாப்பிடட்டுமா என சிரித்தான். சுவையாகச் செய்த கைகளுக்கு தங்க காப்பு போடனும் என்று வெறுமையான கையைப் பிடித்து வருடினான். ஒத்த நகை கூட போட்டுக்க மாட்டேன் என்றீங்க இந்த மோதிரத்தில்....புதைந்துள்ள ரகசியம். மெதுவாக பிடித்த கையை தடவினான். ஐயோ சொல்ல மறந்து விட்டேன். ஆச்சரியம் ஆன்டி. ஆனால் உண்மை . நேத்து அரவிந்த் மெடிகல் ஷாப்புல ஒரு அதிசயத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் .ஆடிட்டேன். கண்களால் என்ன பார்த்தே சொல்லு. மௌன மொழியில் கேட்டாள். அச்சு அசலு உங்கள போலவே இருக்கும் பெண்ணைப் பார்த்தேன். நீங்க பதினெட்டு வயசுலே இப்படித்தான் இருந்திருப்பிங்க போல .அதுலே சின்னஞ்சிறு மாற்றம் உங்க நிறம் விட கொஞ்சம் மட்டம்.என்று உரைத்தவன் வார்த்தை காதில் ஏறவில்லை. சுவர் பக்கம் திரும்பியவளின் முகத்தை அவனும் கவனிக்க வில்லை. பீதியில் இரத்தம் முழுவதும் முகத்தில் உறைந்தது. இலேசாக. கைகள் நடுங்கியது. சொந்தக்காரர் என்று எனக்கு தெரிந்த வரையில் எவருமே கிடையாது. மகளும், ம்....ம்ம் சத்தியமா அதற்கு வாய்ப்பேயில்லை. அப்படி இருக்க உங்க கூட பிறந்த தங்கை அக்காவின் மகளோ,.யாரேனும் இருப்பின் கூறுங்க. எனிவே இதை பற்றி பின்பு பேசலாம் அப்பா வந்திட்டாரு பைக் சத்தம் கேட்குது. வர்றேன் ஆன்டி எனக் கூறி மேலே படி ஏறினான்.. பன்னிரண்டு மணிக்கு ஹாப்பி நீயூஇயர் என்ற கமல் பாடல் எல்லா சேனலிலும் ஓடியது. காந்தன் செல் போன் குறைந்தது.,ஒரு மணி நேரம் தொடர்பில் இருக்க அதன் பின்னர் உறங்க சென்றான். மூடிய கண்ணுக்குள் பதினெட்டு வயது பருவத்து பெண் தோன்றி கலகலவென கரம் கொட்டி நகைத்தாள். அச்சிரிப்பு ஓர் உந்துதல் ஏற்பட பரவசம் அடைந்தான். ச் சீ இதென்ன புதுவிதமாக உள்ளது. அவள் யாராக இருக்கும். உஊ..ஊ.....வென தெருநாய் ஊளையிட அதனைத் தொடர்ந்து மற்ற நாய்களும் லொள்.. லொள்ளு கத்தியது. உறக்கமும் வராததால் படுக்கையை விட்டு எழுந்து சிட்டவுட்டில் நின்று கீழே பார்த்தான். இரவின் நிசப்தம் அமைதியை தரவும் வேப்ப மரத்தடியில் ராகிங் சாரில் ஆன்டிஅமர்ந்திருந்த விதம் விநேதமாகத் தோன்றியது. இந்த நேரத்தில் வெளியே வரமாட்டாங்களே ஒருவேளை குழப்பமாக கீழே செல்ல முயல அவ்விடத்தை விட்டு வீட்டிற்குள் சென்று கதவு தாளிட்டாள். கருப்பு உருவம் பதுங்கியது...........................................................................................................................................................
கருத்துகள் இல்லை