கோவில்பட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு நகராட்சி ஆணையர் அச்சையா தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு என்பதனை வலியுறுத்தி கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிய நகராட்சி ஆணையர் அச்சையா தொடங்கி வைத்தார்.இதில் திரளான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு 2019 என்பதனை வலியுறுத்தும் விதமாகவும், பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பயணியர் விடுதி முன்பு தொடங்கிய பேரணியை நகராட்சி ஆணையர் அச்சையா கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில் கல்லூரி மாணவ – மாணவிகள் திரளாக பங்கேற்று கேரி பையை தவிர்ப்போம், துணிப்பையை கையில் எடுப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், இயற்கையை காப்போம் என்ற விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர். பயணியர் விடுதி முன்பு தொடங்கிய பேரணி மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, புதுரோடு வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது
கருத்துகள் இல்லை