பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு - கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்-
உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவேண்டும் என்ற பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, அவரது நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது .
நீதிபதிகள் கே.எம்.ஜோசப், இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவேண்டும் என்று கொலீஜியம் கடந்த ஜனவரியில் பரிந்துரைத்தது. ஆனால், இந்து மல்ஹோத்ரா நியமனத்தை மட்டும் ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கே.எம்.ஜோசப் நியமனத்தை மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது. இதையடுத்து கொலீஜியம் சமீபத்தில் மீண்டும் கூடி கே.எம்.ஜோசப் நியமனத்தை மீண்டும் வலியுறுத்துவது என்று முடிவு செய்து மத்திய அரசுக்கும் எழுதியது.
அத்துடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வினீத் சரன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது
கருத்துகள் இல்லை