Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் உள்ள கோவில்களில் ஆடிவளைகாப்பு நிகழ்ச்சி- கோலாட்டத்துடன் கலந்து கொண்ட பக்தர்கள்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கோவில்களில் ஆடிவளைகாப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. சீர்வரிசை மற்றும் பெண்களின் கோலாட்டத்துடன் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் திருக்கோவில், வீரவாஞ்சிநகர் புற்றுக்கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் ஆடிவளைகாப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் திருக்கோவிலில் ஆடிவளைகாப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு வணிகவைசிய நடுநிலைப்பள்ளி முன்பு இருந்து வளையல்கள், மஞ்சள்கயிறு, மஞ்சள் குங்குமம் போன்ற மங்கல பொருள்களை பெண்கள் சீர்வரிசையாக ஊர்வலமாக கொண்டு வந்தனர்.ஊர்வலத்திற்கு முன்பாக பெண்களின் கோலட்டமும் நடைபெற்றது. இதன் பின்பு அம்பாளுக்கு சிறப்பு அபிஷகமும்;, வளையல்கள், மஞ்சள் கயிறு, மஞ்சள் அணிவிக்கப்பட்டு வயிற்றில் பாசிப்பயறு கட்டப்பட்டு சிறப்பு பூஜையும் நடந்தது. இதன் பின்பு அம்மனுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு லட்டு, வளையல்கள், மஞ்சள்கயிறு, மஞ்சள் குங்குமம் போனற மங்கள பிரசாதங்கள் வழங்கப்பட்டன

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad