சென்னை டூ சேலம் 8 வழி சாலை உறுதி - இணை அமைச்சர் அறிவிப்பு
சேலம்-சென்னை எட்டு வழி சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் மன்ஷுக் எல். மாண்டவியா தெரிவித்தார் என்கிறது
தமிழகத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு எட்டு வழி சாலையை அமைக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு இருப்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? இத்திட்டத்திற்காக தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவது உண்மை என்பது அரசுக்குத் தெரியுமா? என்று சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பி உள்ளதாகவும் , அதற்கு எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் மாண்டவியா,
எட்டுவழி சாலையை அமைக்கும் அரசின் திட்டத்திற்காக தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கள அலுவலகம் மூலம் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
எட்டு வழி சாலை திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக மறுபரிசீலனை ஏதும் அரசு மேற்கொள்ளவில்லை. ஆனால், இந்த சாலையால் 68 கிலோமீட்டர் தூரம் குறைவதுடன் பல்வேறு பயன்கள் உள்ளன என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து உள்ளதாகவும் விளக்குகிறது
கருத்துகள் இல்லை