Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 5 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் 5 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட இருமடங்காக உள்ளது. மேலும் ஆட்டுச்சந்தைக்கு 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு வந்து சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது எட்டயபுரம். தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுசந்தைகளில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை என சுமார் 12 மாவட்டங்களை சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும், பொது மக்களும் இங்கு வருவது வழக்கம், ஒவ்வொரு வரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் சராசரியாக 3 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது. விலைக்கு ஏற்ற ஆடுகள் கிடைப்பது மட்டுமின்றி, இப்பகுதியில் பெரும்பாலும், விவசாயிகளை ஆடுகளை வளர்ப்பதால், இயற்கை உணவு ஆடுகளுக்கு கிடைத்து விடும் என்பதால் ஆட்டு கறி ரூசியாக இருக்கும் என்பதால் அதிகளவில் மக்கள் எட்டயபுரம் சந்தையை நோக்கி பல ஆண்டுகளமாக ஆடுகள் வாங்க வருகின்றனர். 


    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகளின் வரத்து மட்டுமின்றி சுமார் 5 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று உள்ளதால் ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரணம் வரும் 22ந்தேதி பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளதால் இன்று விற்பனை அமோமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது, வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரம் ஆடுகள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்த பட்சமாக ரூ 3 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் வெள்ளாடு விட செம்மறி ஆடுகளை அதிகளவு வாங்கியதால், செம்மறி ஆட்டுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. கடந்த ஆண்டு 10 ஆயிரம் வரைக்கு தான் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஆனால் இந்தாண்டு ஆடுகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், ஆனால் ஆடுகளின் வளர்ப்பு தரமாக இருப்பதாக ஆடுகள் வாங்க வந்த வியாபாரிகளும், பொது மக்களும் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது போல, ஆடுகள் வாங்க வந்த மக்களின் கூட்டமும் கடந்த ஆண்டை விட கணிசமான அளவு அதிகமாக காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஆடுகளை ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கி சென்றனர். அதிக ஆடுகள் விற்பனை மற்றும் விலை அதிகம் என்பதால் இன்று மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள், ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad