Header Ads

  • சற்று முன்

    பழனி அருகே ஜவகர் நகரில் சோடியம் பல்பின் கதிர்வீச்சு தாக்கி 500 க்கும் மேற்ப்பட்டோர் கண் பாதிப்பு..



    பழனி அருகே உள்ள ஜவகர் நகரில் மதுரைவீரன் கோயில் திருவிழா நடைபெற்றது.இந்த திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றுள்ளது.


    இறுதி நாளான நேற்று இரவு 8.30 மணியளவில் ஆட்க்கெஸ்ரா என்ற பாட்டு கச்சேரி நடைபெற்றுள்ளது.


    இதில் மேடை முழுவதும் அதிக பவர் கொண்ட சோடியம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்  இதில் மேடை முன் தொங்கவிட்ட விளக்கிள்  மேல் உள்ள கண்ணாடி இல்லாமல் வெறும் பல்பு மட்டும் இருந்துள்ளது. அதனை கவனிக்காத பொதுமக்கள் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து மகிழ்ந்துள்ளனர். மேலும் அதிலிருந்து வந்துள்ள ஆபத்தான கதிர்வீச்சு அனைவரின் கண்களையும் பாதிப்படையச் செய்துள்ளது. நிகழ்ச்சி இரவு 11.00 மணியளவில் முடிந்துள்ளது.அனைவரும் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளனர். காலையில் எழுந்தவுடன் கண் எரிச்சலுடன் சிவப்பாக உள்ளதால் உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர்.நிகழ்ச்சி பார்த்த 510 பேர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதில் 6 பேர் அருகில் உட்காந்து நிகழச்சி பார்த்ததால் அதிக பாதிப்புடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். மற்ற அனைவரும் பழனி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் பாலசுப்பிரமணி அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றார் .மேலும் தலைமை மருத்துவர் விஐயசேகர் அனைவரையும் பரிசோதித்தார். பின்பு அனைவரும் நன்றாக உள்ளனர் எவ்வித பாதிப்பும் இல்லை பயப்பட தேவையில்லை சரியாகிவிடும் என்று கூறினார்.

    செய்தியாளர்
    பழனி சரவணக்குமார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad