104 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல். இருவர் கைது.
தூத்துக்குடி தருவைகுளம் அருகே காரில் கடத்த முயன்ற 15 லட்சம் மதிப்பிலான 104 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல். இருவர் கைது.
ஆந்திராவில் பயிரிடப்பட்டு மதுரை வழியாக தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரை கிராமம் வழியாக இலங்கைக்கு கஞ்சா போதைப் பொருள் கடத்துவதாக தூத்துக்குடி சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியான தருவைகுளம் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மதுரையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் இருந்த 4 மூடைகளில் இருந்த 104 கஞ்சாவையும் காரில் இருந்த மதுரையைச் சார்ந்த பாண்டி, ராஜாஜி ஆகிய இருவரை சுங்கத்துறையினர் கைது செய்து நடத்தி விசாரணையில் தருவைகுளம் கடற்கரை கிராமம் வழியாக இலங்கைக்கு நாட்டு படகில் கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு 15 லட்ச ரூபாய், சர்வதேச மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். மேலும் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அசோக் என்பவரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து சுங்கத் துறை உதவி ஆணையர் ராஜ் குமார் மோசஸ் கூறுகையில் கடத்தல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கும் என்றார்.
கருத்துகள் இல்லை