Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் சாலையோர மரக்கன்றுகளை சேதப்படுத்திய ஆட்டோ டிரைவர் கைது



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரை பசுமை நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ஜீவ அனுக்கிரஹா பொது நல அறக்கட்டளை சார்பில் சுமார் 1லட்சம் மரக்கன்றுகளை நட்டி, அதனை பாரமரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரை நகரைச்சுற்றி 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டியது மட்டுமின்றி, தினந்தோறும் அதற்கு தண்ணீர் ஊற்றி பாரமரிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுரோடு, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மரக்கன்றுகள் சேதப்படுத்தப்பட்டு கிடப்பதை அதிர்ச்சியடைந்த ஜீவ அனுக்கிரஹா பொது நல அறக்கட்டளையின் நிறுவனர் ராஜேந்திரன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மரக்கன்றுகள் சேதப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா வீடீயோக்களை ஆய்வு செய்தனர். இதில் கோவில்பட்டி தங்கபநாடார் நந்தவன பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் தாஸ் என்பவர் மரக்கன்றுகளை சேதப்படுத்தியது தெரியவந்தது. ஆட்டோ டிரைவரான தாசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதியல், தாஸ் மகாத்மாகாந்தி ரத்ததான கழகம் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருவதாகவும், நகர் முழுவதும் ஜீவ அனுக்கிரஹா பொது நல அறக்கட்டளை மரக்கன்றுகளை நட்டி பெயர் வாங்குவதை தாங்க முடியமால் காழ்ப்புணர்ச்சியில் செய்ததாக தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்ச்சி காரணமாக சாலையோர மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad